2025 மே 14, புதன்கிழமை

கணவன் தாக்கியதில் மனைவி பலி

Kanagaraj   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

கணவன் தாக்கியதில் அவரது மனைவி பலியான சம்பவமொன்று வென்னப்புவ, வைக்கால் தம்பரவில எனுமிடத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 

இவ்விருவருக்குமிடையில் இன்று அதிகாலை முதல் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் பின்னரே மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 42 வயதான சந்தேக நபர் தனது மனைவியை கை மற்றும் கால்களில் கடுமையாக தாக்கியதுடன் கூரிய ஆயுதம் ஒன்றினாலும் தாக்கியே கொலை செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கணவரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X