2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மாரவில, வீரஹேன பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ள  வாகன விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் நேருக்குநேர் மோதி  இவ்விபத்து சம்பவித்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

நாத்தாண்டி, வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாரசிங்க ஆரச்சிகே ஹர்மன், கம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தம்பைய்யா சிவலிங்கம் ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் லொறிச் சாரதியை  மாரவில பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பில் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X