2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

எரிபொருளைத் திருடிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

முந்தல் பிரதேசத்தில் அரசாங்க  வாகனங்களிலிருந்து எரிபொருளைத் திருடி வந்ததாகக் கூறப்படும்  இருவரை முந்தல் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

முந்தல் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 304 லீற்றர் டீசல்,  7 பரல்கள், 38 பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட பொருட்கள்; கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு வாகனங்களிலிருந்து திருடப்பட்ட எரிபொருளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாக இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்டுள்ள எரிபொருளுடன் சந்தேக நபர்கள் இருவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X