2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சீ.சபூர்தீன்


வடமத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களாக கடமையாற்றிவந்த 718 பேருக்கான நிரந்தர நியமனங்கள் இன்று புதன்கிழமை காலை வழங்கப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கணே, முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், மாகாண கல்வி அமைச்சர் கே.எச்.நந்தசேன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆசிரிய உதவியாளர்களாக கடமையாற்ற வந்த இவர்களுக்கு ஆரம்பத்தில் 3,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்ததோடு பின்னர் 6,000 ரூபாவரை இந்தக் கொடுப்பனவு உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொண்ட இவர்களுக்கு  25,000 ரூபாவை அண்மித்த தொகை சம்பளமாக வழங்கப்படவுள்ளது எனவும் மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X