2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அரச காணியை தம்வசப்படுத்தியவர் கைது

Super User   / 2013 டிசெம்பர் 19 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

வண்ணாத்திவில்லு, விஜயபுர பிரதேசத்தில் உள்ள சுமார் 160 ஏக்கர் அரச காணி போலி  உறுதி தயாரித்து தம்வசப்படுத்திக் கொண்டவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நோர்வே நாட்டு பிரஜா உரிமை பெற்றுள்ள இலங்கையரான இவர், கிறீன் பீல்ட்  நிறுவனத்தின் உரிமையாளருமாவார்.

புத்தளம் நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய செல்வி பாரதி விஜேரத்ன முன்னிலையில் இன்று மாலை இவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டவரின் நோர்வே கடவுச்சீட்டினை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு அடுத்த வருடம் மார்ச் 18ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X