2025 மே 14, புதன்கிழமை

மைலங்குலம் கிராமத்தில் ஆயுர்வேத மத்திய நிலையம் திறப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்குட்பட்ட மைலங்குலம் கிராமத்தில் ஆயுர்வேத மத்திய நிலையமொன்று சனிக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கான புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மற்றும் மாகான சபைகள் அமைச்சர் அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகான சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, வண்ணாத்திவில்லு பிரதேச சபைத் தலைவர் இந்திக, வடமேல் மாகான உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் வீரசேகர, ஆயூர்வேத திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும் புத்தளத்தின் எல்லைப் பகுதியான காலாவி ஆற்றிலிருந்து மன்னார் வரையுள்ள பகுதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X