2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இந்திய பிரஜை கைது

Super User   / 2013 டிசெம்பர் 23 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

சுற்றுலா பயண விஸாவில் இலங்கை வந்து ஆடை விற்பனையில் ஈடுபட்ட இந்திய பிரஜையொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கல்பிட்டி நகரில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயண வீசாவில் இலங்கை வந்து இவ்வாறு பல இந்தியர்கள் புத்தளம் மாவட்டத்தில் ஆடை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X