2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் சிறுவன் காயம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்

மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்ட 04 வயதுச் சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளே இந்தச் சிறுவன் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் -  அநுராதபுரம் வீதியில் புஞ்சிவில்லுவத்தை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நத்தார் தினமான இன்று புதன்கிழமை காலை தனது தந்தையுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு நத்தார் பரிசு எடுத்துச் சென்றுகொண்டிருந்தபோதே, இந்தச் சிறுவன் விபத்துக்கு உள்ளானான்.

அஸ்மிக சேனால் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு விபத்துக்கு  உள்ளானான்.

இந்த விபத்து இடம்பெற்றுள்ளபோதிலும், குறித்த உப பொலிஸ் பரிசோதகர்  மோட்டார் சைக்கிளை நிறுத்தாது செலுத்திச் சென்றுகொண்டிருந்தார். இந்த நிலையில்,  இவரை  பிரதேசவாசிகள் பிடித்து அங்கு வந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இந்த நிலையில், குறித்த உப பொலிஸ் பரிசோதகர் மதுபோதையில் இருந்தாரா அல்லது இல்லையா என்பதை உறுதி செய்வதற்காக அவர் புத்தளம் வைத்தியசாலையில் வைத்தியப்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X