-எம்.எஸ்.முஸப்பிர்
வடமேல் மாகாணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக வடமேல் மாகாண முகாமைத்துவ பயிற்சி நிலையத்தினால் பயிற்சி நெறிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. வடமேல் மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை விரைவு படுத்தும் நோக்கிலும், வினைத்திறனுள்ள அரச சேவையினை ஏற்படுத்தும் வகையில் அரச உத்தியோகத்தர்களின் அறிவையும், திறமைகளையும் தேவைக்கேற்ப வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
வடமேல் மாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு தொடர்ந்து இது தொடர்பில் கருத்து தெரிவித்த முதலமைச்சர் தயாசிரி, தற்போது வடமேல் மாகாணத்தில் 44,379 அரச உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும், மாகாண அரச சேவையினை வினைத்திறனுடன் கூடிய வகையில் சீரமைக்கும் வகையில் முகாமைத்துவ அறிவு, பாஷை திறன், விடயங்களுடன் கூடிய பயிற்சிகள் போன்ற துறைகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதனூடாக வினைத்திறனுள்ள முழுமையான சேவையினை வடமேல் மாகாண மக்களுக்கு வழங்க முடியும் என்றார்.