2025 மே 14, புதன்கிழமை

புத்தளத்தை கடந்த சிவில் பாதுகாப்பு வீரர்கள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


சமாதானச் சூழலில் நாட்டின் எப்பகுதிக்கும் சென்று வரம் முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதையும் சுற்றி வரும் நடை பவனியை மேற்கொண்டு சிவில் பாதுகாப்பு படையணியின் இரு வீரர்கள் இன்று பகல் புத்தளத்தை அடைந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி களுத்துறை பௌத்த விகாரையிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்த இவ்விருவரும் 42 தினங்களாக தமது பயணத்தைத் தொடர்ந்து இன்று புத்தளம் வழியாக கொழும்பு நோக்கிச் சென்றனர்.

களுத்துறையில் தமது பயணத்தை ஆரம்பித்த இவ்விருவரும் கிழக்கு மாகாணம் சென்று வடக்கு மாகாணமும் சென்று மன்னார் வழியாக இன்று புத்தளத்தைக் கடந்து சென்றனர்.

இவர்களுக்கு பாதுகாப்பு பிரிவினர் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X