2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 01 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கேரள கஞ்சாவை விற்பனைக்கு  வைத்திருந்ததாகக் கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  இவர்களிடமிருந்து கேரள கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கல்பிட்டி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இவர்களைக் கைதுசெய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி, பாலாவி, கண்டக்குளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள் கடந்த காலங்களில் வெளியிடங்களிலிருந்து கேரள கஞ்சாவை கல்பிட்டி பிரதேசத்திற்குக் கொண்டு வந்து விற்பனை செய்து வந்திருப்பதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா கொள்வனவுக்காக செல்வது போன்று சென்று இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X