2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் தொழில் ஏனைய தொழில்களைவிட விசேடமானது: தயாசிரி ஜயசேகர

Kogilavani   / 2014 ஜனவரி 02 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


'மாணவர்களது வாழ்க்கையானது வெற்றிகரமானதாக அமைவதும், மோசமானதாக அமைவதும் ஆசரியர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

ஆசிரியர் தொழிலானது ஏனைய தொழில்களை விடவும் விஷேடமான ஒரு தொழிலாகும். இத்தொழிலானது சுதந்திரமாகப் பணியாற்றக் கூடியதாக இருந்தாலும் பிள்ளைகளின் எதிர்கால நலனுடன் இத்தொழில் தொடர்புடையதாக உள்ளது' என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபையினால் 329 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் புதன்கிழமை (1)  குருனாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஆசிரியர் தொழில் என்பது இவ்வுலகில் முதலிடத்தில் உள்ள ஒரு தொழில். எனது தாயும் ஒரு ஆசிரியையே. எனவே இத்தொழில் பற்றி எனக்கு நன்கு தெரியும். இங்கு இருக்கும் அனைவரும் மிகப் பெரிய ஒரு பொறுப்பைச் சுமக்க இருப்பவர்களே. எமது நோக்கம் வடமேல் மாகாணம் மிகவும் உறுதிமிக்க ஒரு மாகாணமாக திகழ வேண்டும் என்பதே.

உங்களை கஷ்ட பிரதேசம் என நினைக்கும் கஷ்ட பிரதேசமற்ற பகுதிகளுக்கே நியமிக்கின்றோம். மாஹோ மற்றும் புத்தளம் வலயங்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

இன்று புத்தளத்தில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இன்று நியமனம் பெறும் இந்த 329 ஆசிரியர்களுடன் இந்த ஆசிரியர் பற்றாக்குறையினை குறைக்கும் வேலைத்திட்டத்திற்கே நாம் இன்று கைவைத்துள்ளோம். மாஹோ மற்றும் புத்தளம் வலயங்களின் கல்வித் தரத்தை முன்னேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X