-எம்.எஸ்.முஸப்பிர்
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சேர்விஸ் நிலையம் நடாத்தி வந்த ஒருவர் தனது வேலைத்தளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர். இன்று சனிக்கிழமை பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தும்லசூரிய, யகன்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இறந்துள்ளார்.
இவர் தனது வீட்டுக்கருகிலேயே இந்த சேர்விஸ் நிலையத்தை நடாத்தி வந்துள்ளார். இன்று (04) பகல் முச்சக்கர வண்டியொன்றினை சேர்விஸ் செய்துவிட்டு அவ்வண்டியின் பணிகளை முடித்துக் கொண்டிருந்த சமயமே அவர் இவ்வாறு மினசாரத் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தான் கழுவிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் அருகிலேயே ஷவீழ்ந்து கிடந்ததை அவ்வழியால் சென்ற ஒருவர் அவதானித்து, உடனடியாக அயலவர்களின் உதவியுடன் குளியாபிட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இம்மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது. தும்மலசூரிய பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.