2025 மே 14, புதன்கிழமை

தனிமையிலிருந்த பெண்ணை அச்சுறுத்தி பணம் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 05 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவ, கங்கொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 210,000 ரூபா  கொள்ளையிடப்பட்டுள்ளது என்று  அந்த வீட்டிலிருந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு  மோட்டார் சைக்கிள்களில் குறித்த வீட்டுக்கு வந்த  முகமூடி அணிந்த நால்வர், கைத்துப்பாக்கியொன்றைக் காட்டி தனிமையிலிருந்த பெண்ணை அச்சுறுத்தி விட்டு பணத்தை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்யும் முகமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X