2025 மே 14, புதன்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2014 ஜனவரி 06 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளுவெல்கால எனும் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்வத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வென் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நெருக்கு நேர் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த கொஸ்வத்தை பளுவெல்கால பிரதேசத்தை  சேர்ந்த 32 வயதான சுதத் எண்டனி அப்புஹாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றவர்கள் பயணித்த வேன் ஒன்றுடனேயே உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வேன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கொஸ்வத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X