2025 மே 14, புதன்கிழமை

வலம்புரிச் சங்குகளுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 07 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம், முன்னேஸ்வரம் பிரதேசத்தில் 06 வலம்புரிச் சங்குகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் கணவன், மனைவி ஆகிய இருவருடன் கார்ச் சாரதி ஒருவரையும் நேற்று திங்கட்கிழமை  கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து வலம்புரிச் சங்குகளை கைப்பற்றியுள்ளதாகவும்  சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்த நிலையில் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

மேலும், முன்னேஸ்வரம் கோவிலுக்கு தாங்கள் வழிபாட்டுக்காக வந்துள்ளதாக பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இவர்களை சோதனையிட்டபோது,  பயணப்பையொன்றில் மறைத்துவைக்கப்பட்ட 06 வலம்புரி சங்குகளும் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி வலம்புரிச் சங்குகளை காளி கோவிலொன்றிலிருந்து  பணத்திற்கு வாங்கியதாகவும் பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

எனினும், ஒரு வலம்புரிச் சங்கு 10 இலட்சம் ரூபா படி 06 வலம்புரிச் சங்குகளையும் 60 இலட்சம் ரூபாவுக்கு இவர்கள்  விற்பனை செய்ய இருந்தமை தொடர்பில்  தகவல் கிடைத்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் பிரசித்தமான இந்துக் கோவில்களுக்கு விற்பனை செய்வதற்காக மேற்படி வலம்புரிச் சங்குகளை இவர்கள் எடுத்துச் செல்வதாகவும் இவ்வாறு செல்லும் வழியில் இங்கு  வந்துள்ளதாகவும் விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.


இவர்களிடம் சிலாபம் பொலிஸார் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0

  • mohamed Tuesday, 07 January 2014 08:12 AM

    அப்போ வைத்திருப்பதற்கு என்ன செய்யனும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X