2025 மே 14, புதன்கிழமை

நிதி மோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

Super User   / 2014 ஜனவரி 08 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்        

இலட்சக் கணக்கான ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் கூட்டுறவு எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முன்னாள் முகாமையாளரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவான்னிகா மாரசிங்க நேற்று உத்தரவிட்டார்.

அநுராதபுரம் மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் வங்கிப் பிரதேசத்திலுள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளராக கடமையாற்றிய சமயத்தில் சுமார் 6,587,517.61 ரூபா பணத்தை மோசடி செய்து தலைமறைவாகி வந்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ஆறு சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசி, இரண்டு வங்கிப் புத்தகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அநுராதபுரம் கோட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி மஹேஷ் சேனாரத்னவின் ஆலோசனைப்படி குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி டீ.எம்.டீ.சீ.திஸாநாயக்காவின் தலைமையிலான குழவினரே சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X