2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தான் பணியாற்றிய வீட்டில் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 09 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தங்கொட்டுவ, லிஹிரியாகம பிரதேசத்தில் தான் பணியாற்றிய வீடொன்றிலிருந்து   115,000 ரூபாவை திருடியதாகக் கூறப்படும் பணியாளர் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு அப்பணத்துடன் கைதுசெய்துள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

அவசர வேலையொன்றுக்காக தான் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது, அறை அலுமாரி திறக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்ததை அவதானித்ததாக வீட்டு உரிமையாளரான விமல் விஜித குமார (வயது 31) என்பவர் முறைப்பாட்டில் தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறினர். 

இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைதுசெய்து அவரைச் சோதனையிட்டபோது, அப்பணம் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X