2025 மே 14, புதன்கிழமை

சகோதரர்களால் சிறுமி துஷ்பிரயோகம்: ஒருவர் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பாடசாலை மாணவியான சிறுமி ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் கரவிட்டாகார அலுத்வௌ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியான மாணவி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவராவார்.

குறித்த 15 வயதுடைய சிறுமி நேற்று பகல் தேவை ஒன்றின் நிமித்தம் வெளியில் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இடைவழியில் நின்றிருந்துள்ள சந்தேக நபர்கள் அவனை பற்றை ஒன்றிற்குள் இழுத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் அச்சிறுமியின் மாமியினதும், மற்றையவர் அச்சிறுமியின் சித்தப்பாவின் மகனுமாவார் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுள் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X