2025 மே 14, புதன்கிழமை

பாபுல் ஆதம் பாடசாலைக்கு முஸ்லிம் எய்டினால் நூல் நிலையம் கையளிப்பு

Super User   / 2014 ஜனவரி 13 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


குருணாகல், மினுவாங்கெட பிரதேசத்திலுள்ள மெல்லபொத்த பாபுல் ஆதம் பாடசாலைக்கு முஸ்லிம் எய்ட ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் நூல் நிலையமொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் நிலைய திறப்பு விழா கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மினுவாங்கெட வலய கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலர் மற்றும் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவின் பணிப்பாளர் பைசர் கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

170 மாணவர்களையும் 14 ஆசிரியர்களையும் கொண்ட இந்த பாடசாலையில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் அதிகமானோர் கல்வி கற்கின்றனர். எனினும் இந்த பாடசாலை நூலகமொன்றை நிர்மாணிக்குமாறு மெல்லபொத்த கிராம மக்கள் மற்றும் பாபுல் ஆதம் பாடசாலை சமூகத்தினர் கோரிக்கைவிடுத்தனர்.

இவர்களின் நீண்ட காலத் தேவையையும் கோரிக்கையினையும் கவனத்தில் கொண்டு 'அனைவருக்கும் கல்வி' எனும் தொனிப்பொருளின் கீழ் முஸ்லிம் எய்டினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொடர் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கருத்திட்டத்தின் கீழ் இந்த நூலகம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X