2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பெண் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 16 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானுவன்கம பிரசேத்தில்  நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீயானி மல்லிகா (வயது 45) என்ற பெண்ணொருவர் மரணமடைந்ததாக  சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாகச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இவர் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக பொலிஸார் கூறினர்.

விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  லொறியின்; சாரதியை கைதுசெய்த பொலிஸார், இவர் மதுபோதையில் காணப்பட்டதாகவும் கூறினர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை சிலாபம் பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .