2025 மே 14, புதன்கிழமை

'அமைதியாகச் செல்லவும்' விளம்பரப் பலகைக்கு தீவைப்பு

Super User   / 2014 ஜனவரி 19 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


மாவத்தகம பொலிஸ் பிரிவிலுள்ள கண்டி - குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்பாகவுள்ள "அமைதியாகச் செல்லவும்" எனும் விளம்பரப் பலகைக்கு இனந்தெரியாத குழுவினர் இன்று அதிகாலை தீயிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பலகைக்கு அண்மையில் காணப்பட்ட ரான்ஸ்போமர் என்று அழைக்கப்படும் பிறப்பாக்கியும் எரிந்துள்ளது.

இந்த விளம்பர பலகையினை அகற்றுமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குருநாகல் நகரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பொதுபலசேனவினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இதேவேளை, இந்த விளம்பர பலகை தொடர்பில் மாவத்தகம நீதவான் நீதிமன்றம் மற்றும் குருநாகல் மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையிலேயே இந்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு வார காலமாக  திருடர்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் குருநாகல் சிங்கபுர பிரதேசத்தில் நேற்று இரவு 11 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இருவர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X