2025 மே 19, திங்கட்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கட்டவர் ஹெரோயினுடன் கைது

Kogilavani   / 2014 ஜனவரி 20 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம் உயர் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயினை விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிலாபம், காவட்டியவத்தை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளாதாக சிலாபம் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்  தெரிவித்தனர்.

ஒரு கிராம் 580 மில்லிகிராமும் எடை கொண்ட ஹெரோயின் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

தனது மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றதன் பின்னர் சிலாபம் பிரதேசத்திற்கு வந்துள்ள சந்தேக நபர்; அங்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளதுடன், இவ்வாறு ஹெரோயின் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தான் கொழும்பிலிருந்து ஹெரோயினைக் கொண்டு வந்து சிலாபம் பிரதேசத்தில் விற்பனை செய்வதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.  இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும்; மேற்கொண்டு வருகின்றனர்.

2004ஆம் ஆண்டு வென்னப்புவ சிரிகம்பல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மேற்படி நபர்மீது, சிலாபம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனாலும் குறித்த நபர் வழக்கு விசாரணைகளுக்குச் சமூகமளிக்காத காரணத்தினால் அவருக்கு நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X