2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உப்பு உற்பத்தியாளர்களின் சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Super User   / 2014 ஜனவரி 20 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


புத்தளம் வரையறுக்கப்பட்ட தனியார் உப்பு உற்பத்தியாளர்களின் சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் தமக்கு வழங்கப்படும் ஊதியம் போதாது என்றும் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு வரையறுக்கப்பட்ட புத்தளம் தனியார் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் நிருவாகத்தினரின் கவனத்தைக் கோரும் வகையில் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே  சம்பளம் அதிகரித்து தருவதாக வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். "தமக்குச் சுமுகமான தீர்வு கிடைக்கும் வரை இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக" அவர் மேலும் தெரிவித்தனர்.

இவர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று புத்தளத்திலிருந்து  தனியார் துறையினரின் உப்பு விநியோகம் தடைப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .