2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

முயல் வேட்டை; ஆசிரியர் கைது; அதிபருக்கு வலைவீச்சு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 26 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

முயல் வேட்டைக்குத் துப்பாக்கியுடன் சென்ற அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இருவரை இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்துள்ள கற்பிட்டி கடற்படையினர், அவர்களை மேலதிக விசாரணைக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர் ஆசிரியர் என்பதுடன் மற்றையவர் சமுர்த்தி உத்தியோகஸ்தர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரு துப்பாக்கிகளும் அனுமதிப்பத்திரம் பெறப்பட்ட துப்பாக்கிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அவ்விடத்திலிருந்து துப்பாக்கியுடன் தலைமறைவாகிய பாடசாலை அதிபர் ஒருவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .