2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய ஐவர் கைது

Suganthini Ratnam   / 1999 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்த தொடுவா பிரதேசத்தில்  மணல் அகழும் போர்வையில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 5 பேரை நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து 02  பெக்கோ இயந்திரங்கள், 02 லொறிகள்,  ஒரு கார் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று மேற்படி  சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இருப்பினும், தாங்கள் புதையல் தோண்டவில்லை எனவும் மணல் அகழ்வில் ஈடுபட்டதாகவும் தம்மிடம் மேற்படி சந்தேக நபர்கள் கூறியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .