2025 மே 19, திங்கட்கிழமை

முந்தலில் மூன்று துப்பாக்கிகள் மீட்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 28 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதி ஒன்றில் போடப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகளைக் கண்டெடுத்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ன.

இந்த துப்பாக்கிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த போது அவர்களுக்கு பொலிஸார் வருகிறார்கள் என்று ஏற்பட்ட அச்சம் காரணமாக அவ்வீதியில் இருந்த காட்டுப் பகுதியில் போட்டுவிட்டுப் போயிருக்கலாம் என சந்தேகிப்பதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகளுள் ஒன்று வெளிநாட்டுத் தயாரிப்பிலான துப்பாக்கி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிகளைக் கொண்டு வந்து காட்டினுள் போட்டவர்கள் யார்? எதற்காக துப்பாக்கிகளைக் கொண்டு வந்தார்கள் என்பன தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் முந்தல் பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X