2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்திற்கு ஒரு கோடி இருபத்தைந்து இலட்சம் ரூபா நிதி வருமானம்

Kogilavani   / 2014 ஜனவரி 29 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

அநுராதபுர மாவட்டத்தில் கடந்த வருடம் தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களில் புதையல் தேடிய மற்றும் தொல்பொருள் பெறுமதியான பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் கைதாகி வழக்கு தாக்கப்பட்டவர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு ஒரு கோடி இருபத்தைந்து இலட்சம் ரூபா நிதி வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது என அநுராதபுரம் மாவட்ட தொல்பொருட்களைப் பாதுகாக்கும் விசேட பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் காரணமாக கடந்த வருடம் மட்டும் அநுராதபுர மாவட்டத்தில் 200 பேர்; கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

22 பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் ஊடாக மேற்படி நபர்கள் கைதுசெய்யப்பட்டதோடு இவர்களுக்கெதிராக 75 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இவற்றில் 26 வழக்குகள் நிறைவு பெற்றுள்ளதோடு இதனூடாக அரசாங்கத்திற்கு ஒரு கோடி இருபத்தைந்து இலட்சம் ரூபா நிதி வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .