2025 மே 19, திங்கட்கிழமை

குடாப்பொக்குணைக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் விஜயம்

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஸிம் குரைஸி மற்றும் அவரது பாரியார் ரஷ்தா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (31) பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடாப்பொக்குணைக் கிராமத்திற்கு விஜயம் செய்தனர்.
 
குடாப்பொக்குணையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு பொதுக் கிணறுகளைப் பொதுமக்களிடம் கையளிப்பதற்காகவே பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
 
அந்தப் பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகளையும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.
 
திருக்கோணமடு முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டு அந்தப்பாடசாலையில் நிலவும் குறைபாடுகளையும் அவர் கேட்டறிந்து கொண்டார்.
 
இந்த விஜயத்தின் போது முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஏ.சி. பைஸர்கான், மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். அஸ்மி, உட்கட்டமைப்பு திட்ட அதிகாரி எம்.எம்.எம். முனீர் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் தமிழ், முஸ்லிம் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
 
குடி நீர்ப் பற்றாக்குறையுள்ள இந்தக் கிராமத்தில் பாறைகளைக் குடைந்து இரண்டு பாரிய பொதுக் கிணறுகளை அமைத்துக் கொடுப்பதற்காக முஸ்லிம் எயிட் நிறுவனம் சுமார் 4 இலட்ச ரூபாய்களைச் செலவிட்டுள்ளதாக முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி எம்.அஜாரி தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X