2025 மே 19, திங்கட்கிழமை

வானத்தை நோக்கி சுட்ட கான்ஸ்டபிள் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 01 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜூட் சமந்த

தன்னுடைய கடமைக்குட்பட்ட பிரதேசத்திற்கு அப்பால் சென்று நபரொருவரை அச்சுறுத்தி வானத்தை நோக்கி சுட்டு அவரை பயமுறுத்தியதாக கூறப்படும் மாரவில போக்குவரத்துப்பிரிவைச்சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த தினத்தன்று கடமையில் ஈடுபட்டிருந்த இரு கான்ஸ்டபிள்களில் ஒருவர்   மோட்டார் சைக்கிள் மூலம் பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திற்கு சென்றே இவ்வாறு அச்சுறுத்தியுள்ளார்.

அச்சுறுத்தப்பட்ட நபர் பொலிஸ் அவர பிரிவுக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தில் கிடந்த இரண்டு வெற்றுதோட்டாக்களை மீட்டதுடன் கான்ஸ்டபிளை இன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X