2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் இன ஒற்றுமையை கட்டிக்காக்க பாக். உதவும்: உயர்ஸ்தானிகர்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'இந்த நாட்டிலே எல்லா சமூகத்தவரும் ஒற்றுமையாக வாழ்வதற்காக பாகிஸ்தான் அரசு பல சமூக நலத் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. அதனூடாக சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்' என்று பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஸிம் குரைஸி தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடாப்பொக்குணைக் கிராமத்திற்கு கடந்த வெள்ளிக்கழமை (31) விஜயம் செய்தார். பாகிஸ்தான் அரசின் அன்பளிப்பாக அந்தப் பகுதியில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட இரண்டு பாரிய பொதுக் கிணறுகளை அவர் மக்களிடம் கையளித்து விட்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த பல தசாப்த காலமாக நீங்கள் முகம்கொடுத்து வந்த சிரமமான சூழ்நிலைகளை எமது பாகிஸ்தான் அரசு நன்கு அறியும். மன்னார் உட்பட வடபகுதி அகதிகளின் இடத்திற்குச் சென்று அவர்களது நிலைமைகளை அறியும் வாய்ப்பும் கிடைத்திருந்தது.
 
இலங்கையில் வாழும் எல்லா சமூக மக்களும் சமாதான சகவாழ்வு வாழ்வதையே பாகிஸ்தான் அரசும் விரும்புகின்றது. அதனைக் கட்டி வளர்க்கவே எமது உதவித் திட்டங்களும் வடிவமைக்கப்படுகின்றன' என்று அவர் குறிப்பிட்டார்.

'ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் பாகிஸ்தான் நாட்டுக்குமிடையில் மிக உறுதியான நட்புறவு மிக நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. இலங்கையில் வாழும் எல்லா சமூகங்களும் இன சௌஜன்யத்துடன் வாழ்வதைக் காணவே நாமும் ஆசைப்படுகின்றோம்' என்றார். 

'இந்த நாட்டிலே எல்லா சமூகத்தவரும் ஒற்றுமையாக வாழ்வதற்காக பாகிஸ்தான் அரசு பல சமூக நலத் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. அதனூடாக சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்' என்று அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .