2025 மே 19, திங்கட்கிழமை

லேகியத்துடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி, விருதோடை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து போதை கலந்த லேகியத்தை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை  புதன்கிழமை (05) இரவு கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து லேகியத்தை கைப்பற்றியதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்படி வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த  130 பெரிய பைக்கட்டுக்கள் மற்றும் 3,250 சிறிய பைக்கட்டுக்கள் கொண்ட லேகியம்  03 பெட்டிகளுடன் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இதன் பெறுமதி ஒரு இலட்சத்து 95 ஆயிரம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X