2025 மே 19, திங்கட்கிழமை

பயணியை இடைவழியில் இறக்க முற்பட்ட சாரதி கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தனியார் பஸ் வண்டி நடத்துநரின் தாக்குதலுக்குள்ளான பயணியொருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை, இப்பயணியை இடைவழியில் இறக்குவதற்கு முயன்றதாகக் கூறப்படும்  பஸ் வண்டிச் சாரதியை கைதுசெய்ததாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (11) வவுனியாவிலிருந்து கொழும்புக்குச் சென்ற மேற்படி தனியார் பஸ்ஸில் பத்துளுஓயா, தாராவில்லு பிரதேசத்தில் கோரள ஆராச்சிகே ஹயசிந்தி எண்டனி (வயது 58) என்ற பயணி  மாதம்பை செல்வதற்காக ஏறினார்.

இவர் தனது பயணக் கட்டணமான 70 ரூபாவை பஸ் நடத்துநரிடம் கொடுத்தார்.  பயணக் கட்டணம் 120 ரூபா எனக் கூறி பஸ் நடத்துநர் குறித்த பயணியுடன்  முரண்பட்டார்;. இதனால், நடத்துநர் கேட்ட பணத்தை பயணி வழங்கினார்.

இருந்தபோதிலும்  தொடர்ந்து பயணியை  வம்புக்கு இழுத்த நடத்துநரை  பயணியும் கோபமடைந்து ஏசிய நிலையில், பயணியை நடத்துநர் தாக்கினார்.

இதன் பின்னர் பஸ் நடத்துநர் வழங்கிய தொலைபேசி அழைப்பைத்  தொடர்ந்து ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் அந்த பஸ்ஸில் ஏறிய மேலும் இருவர், குறித்த பயணியைத் தாக்கியதுடன், அவரை பஸ்ஸிலிருந்து  இறக்கவும் முயன்றனர்.

இச்செயற்பாட்டை பஸ்ஸிலிருந்த ஏனைய பயணிகள் கண்டித்த நிலையில்,  ஆராச்சிக்கட்டு பகுதியில் ஏறிய இருவருடன் பஸ் நடத்துநரும் பஸ்ஸிலிருந்து இறங்கி தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு பயணியொருவர் தகவல் வழங்கினார். இதனையடுத்து சிலாபம் நகரில்  பஸ்ஸை நிறுத்திய பொலிஸார்  சாரதியைக் கைதுசெய்ததுடன், பஸ்ஸையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

நடத்துநரையும்  ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் ஏறிய இருவரையும்  கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்காண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X