2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கல்யாணராமன் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 15 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரஸ்மின்

திருமண வீட்டிற்கு மாப்பிள்ளையாக வந்த குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரையும், அவருடன் வந்த இரு தரகர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை புத்தளம்ஈ; கற்பிட்டி ஆலங்குடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கற்பிட்டி ஆலங்குடா கிராமத்தில் உள்ள குடும்பமொன்று ஒருவாரத்திற்கு முன்பு தரகர் ஒருவர் மூலம் தனது மகளுக்கு  மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள்.

குறித்த தரகர் மூலம் குருநாகல் முதுந்துவ, இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன்; ஒருவருக்கும் குறித்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க பெண்ணின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.

அதனையடுத்து குறித்த இளைஞன் பெண்வீட்டிற்கு வருகை தந்ததுடன், பெண்ணை திருமணம் செய்ய தான் விருப்பம் கொண்டுள்ளதாகவும், தனது தந்தை இறந்த விட்டதாகவும்,  தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் பெண் வீட்டாரிடம் கூறியிருக்கிறார்.

ஆத்துடன் தனது திருமணத்திற்கு நண்பர்கள் சிலரை தவிர வேறு யாரும் வரமாட்டார்கள் எனவும் கூறிய இளைஞன்; இந்த திருமணத்தை அவசரமாக செய்து வைக்கும்படியும் கேட்டிருக்கிறார். திருணத்திற்காக பெண்வீட்டாரிடமிருந்து மூன்று இலட்சம் ரூபாவையும் கேட்டிருக்கிறார். அதற்கு பெண் வீட்டார் முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை குறித்த இளைஞரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

அதனையடுத்து இன்றை தினம் சனிக்கிழமை 15ஆம் திகதி திருமணம் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பெண்வீட்டார் மேற்கொண்டிருந்தனர்.

எனினும் இவ்வளவு அவசர அவசரமாக திருமணத்தை நடத்துமாறு குறித்த இளைஞர் பெண்வீட்டாரிடம் கூறிய விடயம் ஒரு சிலருக்கு சந்தேகத்தை ஏற்படத்தியது. இதனால் பெண்வீட்டாரின் உறினர் சிலர் குறித்த இளைஞர் பற்றி விசாரிப்பதற்காக நேற்றைய தினம்  (14.02.2014) வெள்ளிக்கிழமை குருநாகலுக்குச் சென்றனர்.

அங்கு சென்ற பெண் வீட்டாரின் உறவினர்களுக்கோ பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

குறித்த இளைஞன் ஏற்கெனவே மூன்று திருமணங்களை செய்தவர் என்று மூத்த மனைவியின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். இன்றைய தினம் சனிக்கிழமை நண்பகல் வேலை நடைபெற இருந்த திருமணம்  நான்காவதாகும்.

ஏற்கெனவே கிண்ணியா, மூதூர் ஆகிய பிரதேசங்களில் குறித்த இளைஞன் இரண்டு திருமணங்களை செய்துள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து திருமண ஏற்பாடுகளும் கைவிடப்படன.

எனினும் தீர்மானிக்கப்பட்ட திகதி, நேரத்தில் மாப்பிள்ளையை வரவழைக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பதென்றும் குடும்பத்தினர் திர்மானித்துள்ளனர். அதன்படி இன்றைய தினம் குறித்த இளைஞன்; மாப்பிள்ளை கோலத்தில் தனது நண்பர்களுடன் வான் ஒன்றில் வந்துள்ளார். அவருடன்  நான்கு பெண்களும் வந்துள்ளனர்.

பெண்வீட்டிற்கு மாப்பிள்ளை கோலத்தில் வந்த இளைஞரை அங்கு நின்ற இளைஞர்கள் உண்மைச் சம்பவத்தை கேட்டு விசாரித்ததுடன், இளைஞரையும், அவருடன் வந்த இரு தரகர்களையும் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பில்  கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X