2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வி.ஐ.பிக்கு வெடிக்குண்டு மிரட்டல்?

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி விசேட பிரமுகரின் தலைமையில் நடைபெறவிருக்கின்ற வைபவத்தில் வெடிக்குண்டை வெடிக்கவைக்கபோவதாக மாணவர் ஒருவரின் பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாணவனை சிக்கல் மாட்டிவிடுவதற்கு எடுக்கப்பட்ட சூழ்ச்சி என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாணவனை பிரதான மாணவ தலைவனாக நியமிப்பதற்கு பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கடிதத்தை அனுப்பிய நபரை தேடி பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X