2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தாயை நிர்வாணமாக்கி தாக்கிய சிறிய தந்தையை கொன்ற மகன் கைது

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜூட் சமந்த

தனது தாயை நிர்வாணப்படுத்தி கடுமையாகத் தாக்கிய சிறிய தந்தையை கொலை செய்த 16 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 39 வயதான நூஹு சப்னாஸ் என்பவரே கொல்லப்பட்டவராவார். பலத்த காயங்களுடன் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வைத்தியசாலை அதிகாரிகளினால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், வீட்டுக்கு அருகில் உள்ள குழியொன்றில் தவறி விழுந்ததினாலேயே மேற்படி நபர் காயங்களுக்கு உள்ளாகி மரணமானார் என்று கைதான இளைஞனின் தாயார் பொலிஸில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் பிரேத பரிசோதனைகளின் போது இவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில், விசாரணைகளை நடத்திய பொலிஸார், தொடர்ந்தும் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது, உயிரிழந்த நபர் தனது இரண்டாவது கணவர் எனவும் இவர் தினமும் போதையில் வந்து தன்னைத் தாக்குவதாகவும் சம்பவ தினத்தன்று தன்னை நிர்வாணமாக்கி தாக்கியதை பொறுக்க முடியாமல் தனது மகன் அவரை தாக்கியதில் உயிரிழந்தார் என்று அப்பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X