2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மாட்டிறைச்சி விற்க தற்காலிகத்தடை

Kanagaraj   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

புத்தளம் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில்  இறைச்சி விற்பனையினை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக வடமேல் மாகாண கால்நடைகள், கடற்றொழில், விவசாய அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார்.

இதனடிப்படையில் புத்தளம், கருவலகஸ்வெவ, கல்பிட்டி மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளிலேயே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவுகள் அந்தந்தப் பிரதேச உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  புத்தளம் மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தற்போது பரவி வரும் கால்நடைகளுக்கான குளம்பு மற்றும் கோமாரி நோய் காரணமாகவே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மேலும் தெரிவித்தார்.

விஷேடமாக வண்ணாத்திவில்லு கருவலகஸ்வௌ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மாட்டுப் பட்டிகளில் உள்ள மாடுகளுக்கு இவ்வாறான நோய் பரவி வருவதாக மிருக வைத்தியர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

தமது பட்டியிலுள்ள மாடுகளுக்கு இவ்வாறான நோய்கள் பீடித்திருப்பதாக சந்தேகிக்கும் அதன் உரிமையாளர்கள் உடனடியாகவே அவ்வாறான மாடுகளை குறைந்த விலைக்கு வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விடயம் தெரியவந்திருப்பதாகவும் மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தற்சமயம் இந்நோய் பரவியுள்ள பகுதிகளிலிருந்து குளம்புடன் கூடிய கால்நடைகளை வேறு பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் மாகாண அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நோய் காற்றினால் வேகமாகப் பரவி வருவதால் அந்நோயைத் தடுக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அது மிகவும் சிரமமான ஒரு காரியமாக உள்ளதாகவும் மாகாண அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் வடமேல் மாகாணத்திலுள்ள சகல மிருக வைத்தியர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு இந்நோய் பரவுவதை் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Tuesday, 25 February 2014 11:26 AM

    மிருக வதைக்கு எதிராக செயற்படும் பிக்குமார், இந்த கோமாரி நோய் தடுக்க முன்வருவார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X