2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

குளியாப்பிட்டி விபத்தில் ஒருவர் பலி: ஒருவர் காயம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல வீதியில் பொஹித்தகமுவ இகுருவத்தை சந்திக்கு அண்மையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் குருணாக்கல் இந்தகொல்லயைச்சேர்ந்த 19 வயதான பிரதீப் பியாமன்ன என்ற இளைஞன் பலியானதுடனட மற்றுமொரு இளைஞன்; படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டிய சந்தியிலிருந்து நாரம்மல பக்கமாக பயணித்த முச்சக்கரவண்டி இகுருவத்தை சந்திக்கு அருகில் திடீரென வலது பக்கமாக திரும்பியமையால் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளேயே முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவரே மரணமடைந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X