2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

உயரழுத்த நோய்க்குரிய மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண்டிகம, நாகவில புத்திபெதும்கம பிரதேசத்தைச் சேர்ந்த இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.ரணசிங்க காமினி (வயது 52) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (27) அதிகாலை உயிரிழந்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்டத்தின் தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட  பிரதியமைச்சர் விக்டர் அன்டணி பெரேராவின் இணைப்புச் செயலாளராக இவர் பணியாற்றி வந்துள்ளார். 

குளியாப்பிட்டியில் 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியை தனது பிள்ளைகளுடன் செவ்வாய்க்கிழமை (25) பார்வையிட்ட இவர்,  பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு  ஆராச்சிக்கட்டு பிரதேசத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில்,  இவர் உயரழுத்த நோய்க்குரிய  மாத்திரைகளை  அதிகளவில் உட்கொண்ட நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனை அறிந்து சிலாபம் வைத்தியசாலைக்குச் சென்று பார்த்தபோது தனது கணவர் உயிரிழந்திருந்ததாக இவரின் மனைவி கங்கா சுவர்ணலதா (வயது 45) வாக்குமூலத்தில் கூறியதாகவும் பொலிஸார் கூறினர்.

தனது கணவர் உயரழுத்த நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்பவரெனவும் மனைவி கூறினார். 

இவர் 03 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இது தொடர்பான விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X