2025 மே 12, திங்கட்கிழமை

புத்தளத்தில் மூன்று நவீன சந்தை தொகுதி

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் நகர சபை அதன் பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அச்சபையின் தலைவர் கே.ஏ.பாயிஸின் தகவலின் பிரகாரம் "அல்பா", "பீட்டா" மற்றும் "டெல்டா" ஆகிய  மூன்று நவீன சந்தை தொகுதிகளை கொண்ட இந்த  திட்டத்தின் முதலாவது அம்சமான "அல்பா" தொகுதியில் கடை அறைகளை ஒதுக்கும் பொருட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ஏற்கனவே கேள்விகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் நகர சபை இந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தை முதலீட்டாளர்களின் நிதியை கொண்டே செயற்படுத்தவுள்ளது. இப்போது வரவழைக்கப்பட்டுள்ள கேள்விகளின் நோக்கம் முதற் கட்ட வேலைகளுக்கான நிதியை பெற்றுக் கொள்வதாகும். முதற்கட்ட நிருமாண பணிகள் இவ்வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நிறைவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

"அல்பா" சந்தை தொகுதியின் தளப்பகுதியில் உள்ள 32 கடை அறைகள் இலத்திரனியல் பொருட்களாகவும், முதலாம் மாடியின் 32 கடை அறைகள் துணிமணிகள் ஆடை வகைகளுக்காகவும், இரண்டாம் மாடியின் 32 அறைகள் ஆபரணங்கள், அலங்கார பொருட்களுக்காகவும் மூன்றாம் மாடியின் 32 அறைகள் கணினி, தொழில் நுட்ப சாதனங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு மூன்றாம் மாடியில் அதி உயர் தரத்திலான பட மாளிகை ஒன்றும் அமைய உள்ளது. முழு சந்தை தொகுதியும் குளிரூட்டி மூலம் பூரணமாக குளிரூட்டப்பட்டிருக்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X