2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரிக்கு முச்சக்கரவண்டி அன்பளிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் போக்குவரத்துத் தேவைகளுக்காக குழுஊருளு 95 என்ற பழைய மாணவர் சங்கத்தினால் முச்சக்கர வண்டி ஒன்றும் அன்பளிப்பு வெள்ளிக்கிழமை (28) அன்பளிப்பு செய்யப்பட்டது.

கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வின் போது குறித்த பழைய மாணவர் அமைப்பின் அங்கத்தவர்களினால் முச்சக்கர வண்டியின் கல்லூரி அதிபர் ஏ.சி.எம.; யாகூப்பிடம் கையளிக்கப்பட்டது.

அன்பளிப்புச் செய்யப்பட்ட முச்சக்கர வண்டியினை புத்தளம் நகர சபைபத் தலைவர் செலுத்திச் சென்று மைதானத்தை வலம் வந்தார்.

இந்நிகழ்வின் போது புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் நகர சபை உறுப்பினர்களான ஏ.ஓ.அலிக்கான், டி.எம். முஜாஹிதுல்லாஹ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X