2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவன் மரணம்

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் ஒருவன் இன்று (03) உயிரிழந்துள்ளான்.

புத்தளம் தில்லையடியைச் சேர்ந்த சாகிர் முஹம்மட் அப்லல் எனும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன், கடந்த மூன்று நாட்களாக டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர்கள், குறித்த மாணவனை கடந்த 28ஆம் திகதி புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அம்மாணவனுக்கு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (03) மாலை உயிரிழந்துள்ளதாக புத்தளம் தள வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .