2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பறவைகள் சரணாலயத்தில் தீ

Super User   / 2014 மார்ச் 07 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் உள்ள ஆனவிழுந்தாவ பறவைகள் சரணாலயப் பகுதியின் சுருவில குளப்பகுதியில் நேற்று (06) இரவு பரவிய தீயினால் அப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன், அங்குள்ள பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபை தெரிவித்துள்ளது. 

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் அப்பகுதியிலுள்ள குளங்கள் வற்றிப் போயுள்ளன.

கடந்த புதன்கிழமை (05) இப்பகுதியில் ஏற்பட்ட தீகாரனமாக சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பு சேதத்திற்கு உள்ளாகியிருந்தது. வனவிலங்கு திணைக்கள அலுவலக அதிகாரிகள், புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மறுபடியும்  நேற்று (06) இரவு 10.30 மணியளவில் மீண்டும் அப்பகுதியில் தீ பற்றிக் கொண்டுள்ளது.


பிரதேச சபையின் நீர் தாங்கிகள் மற்றும் ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபை தெரிவித்துள்ளது. இந்த தீயினால் அப்பிரதேச குளத்தில் வாழ்ந்த கல் ஆமைகள் தீயில் கருகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X