2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உண்டியல்களில் திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 09 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பகல் வேளைகளில் சாஸ்திர மற்றும் மந்திர வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டும் இரவு வேளைகளில் மத ஸ்தலங்களிலுள்ள  உண்டியல்களில்  பணத்தை திருடி வந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  கருவலகஸ்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பாரதி விஜேரத்ன உத்தரவிட்டார்.

சந்தேக நபரை புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான  பாரதி விஜேரத்ன முன்னிலையில் சனிக்கிழமை (08)  ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

காட்டுப் பிரதேசத்தில் திருடப்பட்ட உண்டியலை   மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X