2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கட்டடத் திறப்பு விழாவும் சான்றிதழ் வழங்கலும்

Kogilavani   / 2014 மார்ச் 10 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம், புழுதிவயலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பகுதிநேர மன்பவுத்தீன் ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாவின்; கட்டடத்திறப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

சுமார் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடம் முற்றுமுழுதாக ஊர் மக்களின் நிதி உதவியைக்கொண்டும் அவர்களின் அயராத முயற்சியாலும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வின் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்-ஷைக் எ.சி அகார் மொஹமட் (நளீமி), வெலிகம பாரி அரபுக் கல்லூரியின் அதிபர் எ.ஆர். அப்துல் ரஹ்மான் (மழாஹிரி), திஹாரிய ஹஸனிய்யா அரபுக் கல்லூரி அதிபர் எ.எல்.றிழா (ஹஸனி) உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதோடு அல்-குர்ஆனை மனனம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X