2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இலந்தையடி கடற்கரையில் கரையொதுங்கிய ஆமைக்குட்டிகள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 12 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


நுரைச்சோலை, இலந்தையடி பிரதேச கடற்கரையில் கரையொதுங்கிய  நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைக்குட்டிகளை நுரைச்சோலை வனஜீவ திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பாக கடலினுள் விட்டனர்.

செவ்வாய்க்கிழமை (11) கரையொதுங்கிய மேற்படி ஆமைக்குட்டிகள் ஒரு நாள் வயதுடையவையென  வனஜீவ திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் கடற்கரையில் அதிகளவான  ஆமைக்குட்டிகள் கரையொதுங்கியதைக் கண்டு, தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் வனஜீவ திணைக்கள அதிகாரிகள் கூறினர்.

கடந்த 25 வருட காலத்தில்; இவ்வாறு  அதிகளவான கடல் ஆமைக்குட்டிகள் கரையொதுங்கிய சந்தர்ப்பம் இதுவெனவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X