2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 12 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வெளியிடங்களிலிருந்து சிலாபம் நகருக்கு கஞ்சாவை கொண்டுவந்து  விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த  ஒருவரை  செவ்வாய்க்கிழமை (11) மாலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் தனியார் பஸ் தரிப்பிடத்தில் சிறிய பொதியொன்றுடன் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக உலாவுவதாக சிலாபம்  குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விஜித கே.மாசக்காரவுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அவ்வப்போது கஞ்சாவை சிலாபத்திற்கு கொண்டுவந்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X