2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பிணி சிறுமிகள் இருவர் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 18 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றிலிருந்து தப்பி வந்ததாகச் கூறப்படும் கர்ப்பிணி சிறுமிகள் இருவரை பஸ் தரிப்பிடம் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு சிறுமிகளும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரக்கல்லி பிரதேசத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த போதே நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம் இரு மாதக் கர்ப்பிணிகள் என அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இவ்விருவரும் காதல் தொடர்பு கொண்டிருந்ததன் காரணத்தினால் அவர்களது காதலர்களினால் கர்ப்பிணியாக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறு வயது தாய்மார்களுக்கான இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்துள்ளனர்.

இவ்வாறு சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையிலேயே இவ்விரு சிறுமிகளும் தப்பி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறுமிகள் இருவரும் எதற்காக அங்கிருந்து தப்பி வந்தார்கள் என்ற சரியான காரணத்தைத் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்த கற்பிட்டி  பொலிஸார் இவ்விருவரும் மீண்டும் தமது காதலர்களுடன் செல்லும் நோக்கிலேயே தப்பி வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

புத்தளம் கல்லடி மதுரகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியும், உடுகம மொரகஹயாய எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு சிறுமிகளையும் புத்தளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X