2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோட்டம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 20 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வழக்கு ஒன்றுக்காக மாரவில நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (19) அழைத்துவரப்பட்ட  சந்தேக நபர்கள் மூவரில் ஒருவர் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தப்பியோட முயன்ற ஏனைய இருவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் மடக்கிப் பிடித்ததாகவும் அந்த அதிகாரிகள் கூறினர்.
மாரவில நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது.  இவ்வழக்கின் சந்தேக நபர்களான இம்மூவரும்  நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாரவில நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக்கூடத்தில் நிறுத்திவைக்கப்பட்டனர். 

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், அங்கிருந்து இம்மூவரில் ஒருவர் தப்பியோடியுள்ளார். தப்பியோட முற்பட்ட ஏனைய இருவரும் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் கூறினர். 

இவ்வாறு தப்பியோடியவர்  தங்கொட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டார்.  தப்பியோடியவரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X