2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிலாபத்தில் தனியார் பஸ் வண்டி பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 20 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபத்திலிருந்து பிங்கிரிய ஊடாக கெட்டுலாவ பிரதேசத்திற்கு  சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளின் பணியாளர்கள் வியாழக்கிழமை (20) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்;.

இவ்வீதியால் ஏற்கெனவே போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக மேலுமொரு பஸ் வண்டி சேவையில் ஈடுபட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தனியார் பஸ் வண்டிகளின் பணியாளர்கள்; தெரிவித்தனர்.

இவ்வீதியால்; ஏற்கெனவே 06 தனியார் பஸ் வண்டிகளுடன் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுகின்றன. இந்நிலையில்,  புதிதாக மேலுமொரு தனியார் பஸ் வண்டி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் வண்டிக்கு அனுமதிப்பத்திரம் உண்டு. கடந்த காலத்தில் சில காரணங்களினால் குறித்த பஸ் வண்டி சேவையில் ஈடுபடாமல் இருந்துவிட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாலேயே இப்பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் வடமேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், மக்கள் நலன் கருதி இவ்வீதியால் இலங்கை  போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .